மறைமலைநகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த வடமேல்பாக்கத்தில், தனியார் பள்ளி சார்பில்,'போதையில்லா உலகம் படைப்போம்; மனித உயிர்களை காப்போம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் பேரணி துவங்கியது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் போதை ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களுடன், எம்.ஜி.ஆர்., சாலை, அண்ணா சாலை, பாவேந்தர் சாலை வழியாக சென்று, மீண்டும் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர்.இந்த நிகழ்ச்சியில், மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் ரமேஷ், போக்குவரத்து போலீசார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.