உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்டையில் விழுந்த போதை வாலிபர் மீட்பு

குட்டையில் விழுந்த போதை வாலிபர் மீட்பு

செங்கல்பட்டு, மது போதையில் குட்டையில் விழுந்த வாலிபர் மீட்கப்பட்டார். கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 32. இவர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தங்கி கட்டுமான பணிகள் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திய பிரபாகரன் பின் தனது அறைக்கு சென்றபோது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை சென்ற பிரபாகரனுக்கு மது போதை அதிகமானதால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தள்ளிவிட்டு ஓடினார். கட்டடத்தின் வெளியே வந்த பிரபாகரன் மருத்துவமனை பின்புறம் உள்ள தண்ணீர் குட்டையில் குதித்தார். இடுப்பளவு சேற்றில் சிக்கிய பிரபாகரன் மருத்துவமனை ஊழியர் நீண்ட நேரம் அழைத்தும் வெளிய வரவில்லை. இதையடுத்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி சேற்றில் இறங்கி பிரபாகரனை மீட்டனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ