மேலும் செய்திகள்
யுவ தசரா இடமாற்றம்: பொது மக்கள் அதிருப்தி
26-Sep-2024
செங்கல்பட்டு, - செங்கல்பட்டில், நவராத்திரியையொட்டி, 10 நாட்கள் தசரா விழா, ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும்.சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன்கோவில், சின்னநத்தம், ஓசூரம்மன்கோவில், முத்துமாரியம்ன் கோவில், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், தசரா விழாவையொட்டி, அம்மன் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும்.இந்த ஆண்டு, தசரா விழா வரும் 3ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை நடக்கும். விழாவையொட்டி, அனுமந்தபுத்தேரி பகுதியில், சிறிய, பெரிய ராட்டினம், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.விழா நடைபெறும் பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா துவங்கிய நாளிலிருந்து விழா முடியும் வரை, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக, 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு நகர பா.ஜ., தலைவர் கஜேந்திரன், கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு:செங்கல்பட்டு நகரில், 100 ஆண்டுகளுக்கு மேலாக, தசார விழா நடைபெற்று வருகிறது. விழாவிற்கு, ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.சுகாதாரமான குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதி செய்து, தினமும் துாய்மை பணி செய்ய வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தசாரவில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.சூதாட்ட விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது. இரவு நேரங்களில், மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும். திருவிழாவின் கடைசி நாளில், சாமி ஊர்வலத்திற்கு இடையூறாக கடைகளோ, ராட்டினமோ அமைக்கக்கூடாது. தினமும் சேகரமாகும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவின் மீது விசாரணை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க, சப்- - கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
26-Sep-2024