உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ராமாபுரத்தில் கார் மோதி முதியவர் பலி

ராமாபுரத்தில் கார் மோதி முதியவர் பலி

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் அருகே ராமாபுரத்தில், கார் மோதி முதியவர் பலியானார். ராமாபுரம் அருகே பாலநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, 65. இவர் நேற்று, செய்யூர் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் உள்ள ராமாபுரம் பகுதியில், காலை 5:00 மணியளவில் டீ குடிக்க வந்துள்ளார். டீ குடித்து விட்டு, ராமாபுரம் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கார், நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ