உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மனைவி மேகவல்லி, 80.நேற்று முன்தினம் மாலை ரேஷன் கடைக்கு சென்று வீடு திரும்பினார். செங்கல்பட்டு பழைய ஜி. எஸ்.டி., சாலையை கடக்க முயன்ற போது செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்ற 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி