மேலும் செய்திகள்
காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது
27-Sep-2025
மணிமங்கலம்:மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதா, 70. இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 22ம் தேதி, வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து, காஸ் கசிந்துள்ளது. இதை கவனிக்காத சீதா, ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, வீட்டில் தீ பற்றியது. இதில் பலத்த தீக்காயமடைந்த சீதாவை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சீதா, நேற்று காலை உயிரிழந்தார். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Sep-2025