ஆபத்தான நிலையில் மின்கம்பம் சீதாபுரத்தில் விபத்து அபாயம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த சீதாபுரம் ஊராட்சிக்கு செல்லும் சாலையோரம், அபாய நிலையிலுள்ள மின்கம்பத்தால், விபத்து அபாயம் நிலவுகிறது.அச்சிறுபாக்கத்தில் இருந்து சீதாபுரம் வழியாக, கடமலைப்புத்துார் வரை செல்லும் சாலை உள்ளது.இதில், சீதாபுரம் சுடுகாடு அருகே சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரி, அப்பகுதி மக்கள் மின்வாரியத் துறையிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மின்கம்பம் அருகிலேயே மின்மாற்றியும் உள்ளதால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.