மின் ரயில் ரத்து தாம்பரத்தில் நெரிசல்
தாம்பரம்:சென்னை கடற்கரை- தாம்பரம் தடத்தில், பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இதனால், அரசு சார்பில் தாம்பரம், பல்லாவரம், தி.நகர், பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு, கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பேருந்து நிலையத்தில், கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.அது மட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதியிலும், அரசு பேருந்துகளில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இதனால், புறநகர்ப் பகுதிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணியர், கடுமையான அவதிக்குள்ளாகினர்.