மின்வாரிய ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திருமணி பகுதியை சேர்ந்தவர் குமார், 52. செங்கல்பட்டு மின் வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணிக்கு அலுவலகம் வந்த குமார் அங்கு உள்ள காவலாளி அறைக்கு சாப்பிட சென்றார். நீண்ட நேரமாகியும் குமார் வராததால் சக ஊழியர்கள் காவலாளி அறைக்கு சென்று பார்த்தபோது நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடந்தார். செங்கல்பட்டு நகர போலீசார் குமார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் குமார் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.