மேலும் செய்திகள்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
11-Jun-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 33 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், 23 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 261 பேரிடம் நேர்முக தேர்வு நடத்தின. இதில், 33 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி ஆணைகளை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் காஜாஷாகுல் அமீது வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11-Jun-2025