உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரத்தில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாம்பரத்தில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாம்பரம்:தாம்பரம் - வேளச்சேரி சாலையில், அதிகரித்துவரும் சாலையோர ஆக்கிரமிப்புகளால், தினமும் 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.மற்றொரு புறம், வாகன ஆக்கிரமிப்புகளை, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாததால், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், வாகன ஆக்கிரமிப்பாக மாறி, வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.தொடர் புகாரை அடுத்து, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.கிழக்கு தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இரண்டாவது நாளாக நேற்று, சேலையூர் முதல் கேம்ப்ரோடு சந்திப்பு வரை இருந்த, சாலை வரை நீட்டிருந்த கடையின் பகுதிகளை, இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கை தொடரும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி