உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம்

தாம்பரம்:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில், பசுமை இயற்கையை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்ற வலியுறுத்தியும், தாம்பரம் சானடோரியத்தில் இருந்து பச்சமலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது.மரங்கள் நடவேண்டும், பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்ற வேண்டும், பச்சை மலையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள், குடியிருப்பு நலச் சங்கத்தினர், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ