உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான விடுதி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

சேதமான விடுதி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதி வளாகத்தில் சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.செய்யூரில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது.இதில் செய்யூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளி அருகே ஆதிதிராவிடர் நலத் துறை சார்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் அரசு மாணவர் விடுதி செயல்படுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.மாணவர் விடுதி வளாகத்தில் பழைய விடுதி கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது, ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமான கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை