உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் - நெல்வாய்பாளையம் சாலை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

செய்யூர் - நெல்வாய்பாளையம் சாலை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூர் - நெல்வாய்பாளையம் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.செய்யூர் அருகே வடக்கு செய்யூர் சாலை சந்திப்பில் இருந்து நெல்வாய்பாளையம் செல்லும், 10 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.இது, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.பெரும்பாக்கம், மடையம்பாக்கம், வீரபோகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தினமும் அதிக அளவில் லாரிகள் வந்து செல்கின்றன.தற்போது அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலை, 3.75 மீட்டர் அகலம் மட்டும் உள்ளதால், எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதில் சிக்கல் உள்ளது. மேலும், அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகின்றன.குறிப்பாக, வடக்கு செய்யூரில் வளைவு பகுதிகளில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளாகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் பயணிக்கின்றனர்.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ