வயலில் சாய்ந்த மின் கம்பம் விபத்து ஏற்படும் அபாயம்
சிங்கபெருமாள் கோவில்:வளர்குன்றம் கிராமத்தில் வயலில் சாய்ந்த மின் கம்பத்தால், விவ சாயிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு, செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாய நிலங்களில் செல்லும் மின் கம்பம் ஒன்று சாய்ந்து உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வளர்குன்றம் வயல் பகுதியில் இருந்த மின் கம்பம், கடந்த ஆண்டு பெய்த மழையின் போது சாய்ந்தது. இந்த கம்பம் இதுவரை மாற்றப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வோர் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கம்பத்தை மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.