விழும் நிலையில் மின்கம்பம் கூடுவாஞ்சேரியில் அச்சம்
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி நகராட்சியில், உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், 20வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் முதல் தெருவில் உள்ள மின் கம்பம், பாதி உடைந்த நிலையில் உள்ளது.இது குறித்து, மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மின் கம்பம் பலவீனமாகி வருவதால், எப்போது வேண்டுமானாலும் சரிந்து கீழே விழுந்து, பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், உயிர் பலியும் நிகழலாம்.எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன், மின் கம்பத்தை மாற்றி, புதிய மின் கம்பம் நடுவதற்கு மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.