உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் ஏரியை துார்வார விவசாயிகள் கோரிக்கை

வண்டலுார் ஏரியை துார்வார விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு:வண்டலுார் ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வண்டலுார் ஊராட்சியில், நீர்வளத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டுப்பாட்டில் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமலும், மதகுகள் பழுதடைந்தும் உள்ளன.இதை சீரமைக்க வேண்டும் என, நீர்வளத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், ஏரிகளை துார் வாரி சீரமைக்க வேண்டும். மதகுகளை சீரமைக்க வேண்டும். மலைகளில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, நீர்வளத் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ