உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அம்மை நோயால் மாடுகள் உயிரிழப்பு தண்டரை கிராம விவசாயிகள் வேதனை

அம்மை நோயால் மாடுகள் உயிரிழப்பு தண்டரை கிராம விவசாயிகள் வேதனை

பவுஞ்சூர்:தண்டரை பகுதியில், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மாடுகள் உயிரிழப்பதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பவுஞ்சூர் அடுத்த தண்டரை, சேவூர், செம்பூர், சீவாடி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் கைகொடுக்காத நேரத்தில், வாழ்வாதாரத்திற்கு மாடுகளையே நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அம்மை நோய் ஏற்பட்டு, மாடுகள் உயிரிழந்து வருகின்றன. ஆனால், இந்த அம்மை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழியின்றி, விவசாயிகள் திணறி வருகின்றனர். இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தண்டரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அம்மை நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. உடலில் கொப்புளம், தோலில் புண் ஏற்பட்டு ரத்தம் வடிகிறது. பின், மிகவும் சோர்வடைந்து, சாப்பிட இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. கடந்த வாரம், தண்டரை கிராமத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாடு ஒன்றின் மூலமாக, ஆறு மாடுகளுக்கு நோய் பரவியது. இதில், மூன்று கன்றுக்குட்டிகள் இறந்தன. சிகிச்சைக்காக தடுப்பூசி, மருந்து என செலவு செய்தும் பயனில்லை. நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தினோம். இருந்தும், நோயின் தாக்கம் குறையவில்லை. எனவே, அம்மை நோயை கட்டுப்படுத்த, சுகாதார துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை