மேலும் செய்திகள்
400 மின்கம்பங்கள் பழுது விரைவில் மாற்ற முடிவு
12-Sep-2025
சேதமான மின் கம்பங்களால் ராமாபுரத்தில் அபாயம்
13-Sep-2025
சித்தாமூர்:வேலுார் கிராமத்தில் வயலில் சாய்ந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட் டம் சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் மழையின் போது, வேலுார் கிராமத்திலுள்ள வயல்வெளியில் பழுதடைந்து இருந்த மூன்று மின் கம்பங்கள் முற்றிலுமாக சாய்ந்தன; இதில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதையறிந்த விவசாயிகள், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், மின் இணைப்பை துண்டித்தனர். அத்துடன், சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது, சம்பா பருவத்திற்கு நெல் நாற்று விட, தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. ஆனால், மின் கம்பங்கள் விழுந்துள்ளதால், தண்ணீர் பாய்ச்சி உழவு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, மின் வாரிய துறை அதிகாரிகள், விவசாய நிலத்தில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
12-Sep-2025
13-Sep-2025