பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் வாட்டாரத்தில் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட ரபி பருவ பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரபி பருவத்தில், நெல்பயிர் காப்பீடு செய்ய, வரும் நவ., 15ம் தேதி கடைசி நாளாகும். தேவையான ஆவணங்கள் சிட்டா, அடங்கள், வங்கி புத்தகம், ஆதார் எண், மொபைல் போன் எண்ணுடன், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையம், அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் அலுவலகத்தை தொடர்பு கொண்டு காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.