உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.5.7 கோடி கஞ்சா கடத்திய பெண் பயணி ஏர்போர்ட்டில் கைது

ரூ.5.7 கோடி கஞ்சா கடத்திய பெண் பயணி ஏர்போர்ட்டில் கைது

சென்னை, வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க பிரிவினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ விமானம் தரையிறங்கியது. பயணியரின் உடைமைகளை, சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 26 வயது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடைமைகளை 'ஸ்கேன்' செய்தனர்.உடைமைகளில் 12 பாக்கெட்டுகளில் உயர்ரக கஞ்சா இருந்தது. அதன் எடை 5.7 கிலோ; சர்வதேச மதிப்பு 5.7 கோடி ரூபாய். இவை, அதிக போதை தரக்கூடிய வகை கஞ்சா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கடத்தல் பெண் பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.விசாரணையில், பெண் பயணி அளித்த வாக்குமூலம்:நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தாய்லாந்து சென்றேன். இந்தியா திரும்பும்போது, தாய்லாந்து நாட்டு காளான், சென்னையில் இருக்கும் நண்பரிடம் தரும்படி கூறி, என்னிடம் கொடுத்தனர். அந்த பார்சல், போதை பொருள் என்பது எனக்கு தெரியாது.தாய்லாந்து சென்று திரும்புவதற்கு இலவச விமான டிக்கெட்டுகள் மற்றும் பார்சலை எடுத்து வருவதற்கு 25,000 ரூபாய் வாங்கினேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை