உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரத்தில் நாய் கடித்து பெண் மயில் உயிரிழப்பு

மாமல்லபுரத்தில் நாய் கடித்து பெண் மயில் உயிரிழப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், நாய் கடித்து பெண் மயில் இறந்தது.மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் உள்ள புல்வெளி பகுதியில் நேற்று, பெண் மயில் ஒன்று இரை தேடி மேய்ந்தது. அதே பகுதியில் உலவிக் கொண்டிருந்த நாய், அதை விரட்டிச் சென்று கடித்ததால், மயில் காயமடைந்தது. அங்கிருந்தவர்கள், மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து, மயில் மீட்கப்பட்டது.பின், வனத்துறையினரை வரவழைத்து மயிலை ஒப்படைத்தனர்.கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், வழியில் மயில் பரிதாபமாக இறந்ததால், வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இந்த மயில், வனப்பகுதியிலிருந்து வழி தவறி இங்கு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை