உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.27.14 லட்சம் அபராதம்

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.27.14 லட்சம் அபராதம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், 273 வாகனங்களுக்கு, 27.14 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலக ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர், கடந்த ஆகஸ்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்கன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 1,200 வாகனங்களை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதமாக 27.14 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டது. மேலும், ஆவணங்களே இல்லாத 33 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. அபராத தொகையில், 4.92 லட்சம் ரூபாய் உடனடியாக வசூலிக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ