உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துப்புறவு பணியாளர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்

துப்புறவு பணியாளர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்

மாமல்லபுரம்,:ஒப்பந்த நிறுவன துப்புறவு பணியாளர்களின் வருகை பதிவிற்காக, பேரூராட்சி நிர்வாகம் கைரேகை பதிவை கட்டாயமாக்கியது.மாமல்லபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பை ஏராளமான குப்பை குவிந்து வருகிறது.மேலும், வீடுகள், விடுதிகள், வர்த்தக கடைகள் ஆகியவற்றிலும் குப்பை குவிகிறது. இந்த குப்பையை தினமும் அகற்றவும், வீடுகள் உள்ளிட்டவற்றில் குப்பை சேகரிக்கவும், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.இந்நிறுவனம், துப்புரவு ஊழியர்களை நியமித்து, குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் பணிபுரிவது தொடர்பாக, முறையான வருகை பதில் இல்லை.இந்நிலையில், காலை 6:00 மணிக்கு பணிக்கு வருவதையும், பிற்பகல் 2:00 மணிக்கு பணி முடிந்து திரும்புவதையும் முறைப்படுத்த கருதி, பேரூராட்சி அலுவலகம், திடக்கழிவு மேலாண்மை வளாகம் ஆகிய இடங்களில், அவர்களின் கைரேகையை பதிவு செய்ய சாதனம் பொருத்தப்பட்டது. தினமும் காலை மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளையும் கைரேகை பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை