உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாஸ்மாக் கடையில் மின்கசிவால் தீ விபத்து

டாஸ்மாக் கடையில் மின்கசிவால் தீ விபத்து

மறைமலை நகர்:மறைமலைநகர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில், கடை எண்: 4021 என்ற அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல டாஸ்மாக் கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.நேற்று முற்பகல் டாஸ்மாக் கடையில் இருந்து கரும்புகை வெளிவந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், 'ஏசி' மற்றும் 'ப்ரிஜ்' முழுதும் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், 'ப்ரிஜ்'ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி