உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மதுராந்தகம்:படாளம் அருகே செயல்படும் தனியார் மது உற்பத்தி ஆலையில், அவசரகால தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஏப்ரல் 14 முதல் 20ம் தேதி வரை, தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி , மதுராந்தகம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் திருமலை மற்றும் சீனிவாசன் தலைமையில், படாளத்தில் உள்ள மது உற்பத்தி ஆலை மேலாளர்கள், பணியாளர்கள் முன்னிலையில், செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.தீ விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை எப்படி மீட்பது, அவசர முதல் உதவி சிகிச்சை எவ்வாறு அளிப்பது என்பன குறித்து, தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !