உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு கலைக்லுாரியில் சேர்க்கை முதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு கலைக்லுாரியில் சேர்க்கை முதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு, இன்று துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், முதல் கட்ட கலந்தாய்வில், பி.எஸ்.சி., பாடப்பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ.,விற்கு 'கட் - ஆப்' மதிப்பெண் 326 முதல் 400 வரை. இதற்கு, இன்று காலை 9:30 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது.இதைத்தொடர்ந்து, 'கட் - ஆப்' 351 முதல் 400 வரை, பி.காம், பி.பி.ஏ.,வுக்கு நாளையும், கட் - ஆப் 91 முதல் 100 வரை பி.ஏ., தமிழ், கட் - ஆப் 71 முதல் 100 வரை ஆங்கிலத்திற்கு, 6ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.கட் - ஆப் 276 முதல் 400 வரை, பி.ஏ., வரலாறு, பி.ஏ., அரசியல் அறிவியல் படிப்பிற்னா 9ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில், பெற்றோருடன் மாணவர்கள் வரும் போது, அசல் மற்றும் நகல் சான்றுகள் எடுத்துவர வேண்டும். மாணவர்கள் சேர்க்கை தர வரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும். கட் - ஆப் மதிப்பெண் உடைய மாணவர்கள் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாக அழைப்பு பெறப்பட்டவர்கள் மட்டுமே முதல்கட்ட சேர்க்கை கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு, கல்லுாரி இணையதளம் www.rvgartscollege.inவாயிலாக தெரிந்து கொள்ளலாம் என, கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ