மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர்வு கூட்டம் 375 மனுக்கள் ஏற்பு
06-May-2025
செங்கல்பட்டு, ''மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாதத்தின் முதல் நாள் நடைபெறும் கூட்டத்தில், முதல் நிலை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்,'' என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மின்னழுத்த குறைபாடு, அரசுக்கு நிலம் வழங்கியதற்கு இழப்பீட்டுத் தொகை, இருளர் குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, படாளம் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 420 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.அதன் பின், அதிகாரிகளுக்கு கலெக்டர் பிறப்பித்த உத்தரவு:மாதத்தின் முதல் நாள் நடக்கும் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், முதல் நிலை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால், முதல் நிலை அலுவலர்கள் பங்கேற்காமல், அதற்கு அடுத்தபடியாக உள்ள ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய பதில் அளிக்காததால், மனுக்கள் நிலுவையில் உள்ளன. முதல் நிலை அலுவலர்கள் கூட்டத்திற்கு வந்தால், மனுக்கள் தேங்கும் நிலை தவிர்க்கப்படும். இதனால், மாதந்தோறும் நடைபெறும் முதல் நாள் மக்கள் நலன் காக்கும் கூட்டத்தில், முதல் நிலை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் உத்தரவிட்டார்.
06-May-2025