உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மீன்வள தொழில் நிறுவன மாநாடு திருப்போரூர் பல்கலையில் துவக்கம்

மீன்வள தொழில் நிறுவன மாநாடு திருப்போரூர் பல்கலையில் துவக்கம்

திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த வாணியஞ்சாவடி பகுதியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை வளாகத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் மீன்வள தொழில் நிறுவன மாநாடு, நேற்று துவங்கியது.விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் கஜலட்சுமி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். அதேபோல், மீன் உற்பத்தி மற்றும் அதற்கான இடுபொருள் தயாரிக்கும் புகைப்படக் காண்காட்சியையும் திறந்து வைத்தார்.தொடர்ந்து, இயக்குனர் கஜலட்சுமி பேசியதாவது:இந்தியாவில், நீளமான கடற்கரையையும் மற்றும் வருடத்திற்கு 6.4 லட்சம் டன் மீன் உற்பத்தியையும், தமிழகம் பெற்று வருகிறது. மேலும், மீன் ஏற்றுமதியிலும், விவசாய பொருட்கள் உற்பத்தியிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், தற்போதைய மீன் உற்பத்தியை காட்டிலும், 14 மடங்கு உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில், நாம் உலகின் இரண்டாவது பெரிய நாடாக மாறக் கூடும்.தமிழகத்தில், ஜெர்ம்பிளாஸம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உள்நாட்டு கடற்பாசி பூங்காவை உருவாக்கும் அரசின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில்,தமிழ்நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, 2030 ஆண்டுக்குள் தனிமனித மீன் நுகர்வை அதிகரிக்க, மதிப்புக்கூட்டிய மீன் உற்பத்தி பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து, ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குதல் தொடர்பாக, இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையப்பமிடப்பட்டன.இம்மாநாட்டில், இந்தியா முழுதும் உள்ள மீன் வளம் சார்ந்த தொழில்களை மேற்கொண்டுவரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், இயக்குனர்கள், மேலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ