மேலும் செய்திகள்
ஸ்கூட்டர்களை குறி வைத்து திருடிய முதியவர் கைது
04-Nov-2024
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் டாக்கா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், 25. பால் வியாபாரி.நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் கட்டப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்த மாடுகளை ஓட்டிவர சென்றார்.அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன், 32, தமிழ், 18, அருள், 33, சக்கிவேல், 28, அய்யனார், ஹரிஹரன், 18, உள்ளிட்டோர், தினேஷிடம் சண்டையிட்டுள்ளனர்.இதைக் கண்ட தினேஷின் உறவினர்கள், மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், மீண்டும் இரவு தினேஷின் வீட்டிற்கு வந்த அந்த மூன்று நபர்களும், அவரிடம் சண்டையிட்டுள்ளனர். இதனை கண்ட தினேஷின் தாயார் கன்னியம்மாள், 46, தினேஷை அறையின் உள்ளே வைத்து பூட்டினார்.இதைக்கண்ட அவர்கள், கன்னியம்மாளை பின் பக்க தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் கன்னியம்மாளை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், அர்ஜுன், தமிழ், அருள், சக்கிவேல், ஹரிஹரன் ஆகியோரை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள அய்யனாரை தேடி வருகின்றனர்.
04-Nov-2024