உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபரை கத்தியால் குத்திய ஐந்து பேருக்கு காப்பு

வாலிபரை கத்தியால் குத்திய ஐந்து பேருக்கு காப்பு

கூடுவாஞ்சேரி, காயரம்பேடு ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கடை உரிமையாளர்கள், சாலையில் நடந்து செல்பவர்களை மிரட்டி, ஐந்து பேர் கொண்ட கும்பல் அட்டகாசம் செய்து வருகின்றனர்.இந்த கும்பல் நேற்று முன்தினம் காயரம்பேடு காமராஜர் தெருவில் வசித்து வரும் பூபதி என்பவரது மகன் விக்னேஷ், 21, என்பவரை கடத்திச் சென்று, தலை மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளனர்.அங்கிருந்தோர் விக்னேஷை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, விக்னேஷின் தந்தை பூபதி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதன் வாயிலாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு, ஐந்து பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர் .இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார், 24, காசி, 19, வீரா, 19,அர்ஜுன், 20, வசந்த், 21 ஆகிய ஐந்து பேரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ