உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வனத்துறை அனுமதி மறுப்பு சாலையை சீரமைப்பதில் சிக்கல்

வனத்துறை அனுமதி மறுப்பு சாலையை சீரமைப்பதில் சிக்கல்

திருப்போரூர்:செங்காடு செல்லும் சாலை சீரமைப்பு பணிகள், வனத்துறை அனுமதி மறுப்பால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர்- - இள்ளலுார் சாலையில் இருந்து செல்லும் செங்காடு சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலை வழியாக மேட்டுக்குப்பம் கிராமம், ஆஞ்சநேயர் கோவில், கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.இதில், 2 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட்டது; 1 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், மேம்படுத்தப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மேற்கண்ட சாலை புனரமைக்கப்பட்டது.தற்போது, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை சீரழிந்த நிலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.மழை நேரத்தில் இச்சாலையில் குளம்போல் பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. சாலையில் உள்ள பள்ளங்களில், இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டிகளில் செல்வோர், இரவு நேரங்களில் பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைகின்றனர்.சாலையை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நிதி ஒதுக்கியும், வனத்துறை அனுமதி இல்லாததால், சீரமைப்பு பணிகள் செய்ய முடியவில்லை. இதேபோல் அப்பகுதி அருகே, பெரியார் நகர் செல்லும் சாலையும் சீரமைக்கப்படாமல் உள்ளது.எனவே, மேற்கண்ட பகுதிகளில், மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, வனத்துறை அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ