அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
திருப்போரூர்:அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என, மாணவ, மாணவியரிடம் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நபார்டு திட்டத்தில், 1.70 கோடி ரூபாய் மதிப்பில், எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதி ல், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஊராட்சி தலைவர் ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேக ரன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.