உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று, ஐந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.ஹிந்து சமய அறநிலையதுறையின் கீழ் உள்ள கோவில்களில், துறை சார்பில், 60,000 ரூபாய் செலவில் திருமணம் நடத்தும் திட்டம் உள்ளது.அதன்படி, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இன்று காலை 9:00 மணியளவில்,ஐந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.இத்திட்டத்தில், 60,000 ரூபாய் மதிப்பில் மணமக்களுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம், மணமகன், மணமகளுக்கு ஆடைகள் வழங்கப்படும்.மேலும் மெத்தை, பீரோ, கட்டில், தலையணை, பாய், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள், அறுசுவை விருந்து உள்ளிட்டவை வழங்கப்படுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை