உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆகாய தாமரை சூழ்ந்த நன்னீர் குளம்

ஆகாய தாமரை சூழ்ந்த நன்னீர் குளம்

பெரும்பாக்கம்,:மேடவாக்கம் -- சோழிங்கநல்லூர் இடையேயான செம்மொழி சாலையில், மாதா கோவில் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கம் பிரதான சாலை துவங்குகிறது. இந்த வழித்தடத்தில் பழண்டியம்மன் கோவில் அருகே, 3 ஏக்கர் பரப்பில் நன்னீர் குளம் உள்ளது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 5 ஏக்கர் பரப்பில் இருந்த குளம், 1990க்கு பின், படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது, 3 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டது.அப்பகுதி தன்னார்வலர்கள் கூறியதாவது:மழைக் காலங்களில் தெருக்களில் வழிந்தோடும் தண்ணீர், இக்குளத்தில் வந்து தேங்கும். இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செழுமையாக இருந்தது. விவசாயம் அதிகளவில் நடந்தது. பின், நகரமயமாக்கலில் குளம் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டது.கடந்த 25 ஆண்டுகளாக குளத்தில் எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. தற்போது கரைகள் துார்ந்து, கழிவுகள் சேர்ந்து, ஆகாயத் தாமரைகள் படர்ந்து, அழிவின் விளிம்பில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குளத்தை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து, குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை