உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் சாலை விபத்தில் நண்பர்கள் பலி

சிங்கபெருமாள் கோவிலில் சாலை விபத்தில் நண்பர்கள் பலி

மறைமலைநகர்:காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்,24. கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிங்கபெருமாள் கோவில் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நண்பரான கரண், 24, மற்றும் சிலருடன், மகேந்திரா சிட்டிக்கு டீ குடிக்க சென்றார்.சதாசிவம் மற்றும் கரண் ஆகியோர் 'கே.டி.எம்., டியூக்' இருசக்கர வாகனத்திலும், மற்ற நண்பர்கள் தங்களின் இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.ஜி.எஸ்.டி., சாலையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த 'கே.டி.எம்., டியூக்' இருசக்கர வாகனம், முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்து, கரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.படுகாயமடைந்த சதாசிவத்தை, சக வாகன ஓட்டிகள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். தகவலின்படி வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கரண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சதாசிவம், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை