உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணை தாக்கிய வழக்கில் தலைமறைவானவர் கைது

பெண்ணை தாக்கிய வழக்கில் தலைமறைவானவர் கைது

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லதா, 35. கடந்த 2022 டிச., மாதம், இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அன்பு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அன்புவின் மகன் ராகேஷ், 20, மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து, லதாவை சரமாரியாக தாக்கினர்.சைதாப்பேட்டை போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த ராகேஷ் தலைமறைவானார். இவர் மீது, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.சைதாப்பேட்டை போலீசார், தலைமறைவாக இருந்த ராகேஷை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ