மேலும் செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
03-Jun-2025
செங்கல்பட்டு:கரும்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்போரூர் அடுத்த, கரும்பாக்கம் பகுதியில், தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. ரெட்டிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர் - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளி, திருப்போரூர் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், பள்ளி சுற்றுச்சுவர் லாரி மோதி உடைந்தது.இதனால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கல்வித்துறை, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.அதன்பின், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என, பெண் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில், விவசாயி சுகுணா, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.இதன் மீது நடவடிக்கை எடுக்க, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். அதன்பின், ஊராட்சி ஒன்றிய பொது நிதி 3 லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
03-Jun-2025