உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காவல் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த குப்பை

காவல் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த குப்பை

மறைமலைநகர், மறைமலைநகர் காவல் நிலையம் அருகே, பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை, பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை, காவல் நிலையத்தின் பின்புறம் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பை, திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ, அங்கு பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த கார்களின் டயர்களுக்கும் பரவி எரிந்தது. இதைப் பார்த்த போலீசார், மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ