உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காப்புக்காடுகளில் கொட்டப்படும் குப்பைகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

காப்புக்காடுகளில் கொட்டப்படும் குப்பைகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

அச்சிறுபாக்கம்,:காப்புக்காட்டில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் ஓட்டல் உணவு கழிவுகளை உண்ணும் மான்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து, வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வனச்சரக அலுவலகத்தின் கீழ், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் தாலுகாவில் 4,872 ஹெக்டர் நிலப்பரப்பில் காப்பு காடுகள் உள்ளன.தவிர சமூக காடுகள் 3,000 ஹெக்டர் பரப்பளவில் உள்ளன.இதில், கோழியாளம், தீட்டாளம், பெருங்கோழி, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, தோட்டச்சேரி, கொளத்தனுார், எடமச்சி, ராமாபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காப்பு காடுகள் உள்ளன.இக்காடுகளில், 2,000 க்கும் அதிகமான மான்கள், ஆயிரத்துக்கும் அதிகமான மயில்கள், காட்டுப்பன்றி, முயல், நரி, குள்ளநரி, உடும்பு, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காப்புக்காடு உள்ள நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகளுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.மேல்மருவத்துார் மற்றும் சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டல்களின் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை, காப்புக்காடுகள் உள்ள பகுதிகளில் மூட்டைகளில் கொண்டு வந்து, சாலை ஓரம் வீசி செல்கின்றனர். அதை மான் மற்றும் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து வந்து உண்ணுகின்றன. அதனால், வாகன விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.கேமரா பொருத்தப்படுமாகாப்புக்காடுகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குப்பை மற்றும் கழிவுகளை வீசி செல்லும் மர்ம நபர்களை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும். சாலை ஓரம் காப்புக்காடு உள்ள பகுதிகளில் தடுப்பு கம்பி வலை அமைக்க வேண்டும்.வனவிலங்குகள் கடந்து செல்லும் பாதை, வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லவும் என பெரிய அளவிலான விழிப்புணர்வு பலகைகள் வைக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !