| ADDED : பிப் 19, 2024 11:36 PM
செய்யூர்:செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. அங்கு, 25,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.சுமார் 40 துப்புரவு பணியாளர்கள் மூலமாக, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.துப்புரவு பணிக்கு, இரண்டு டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 5 நாட்களாக, பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப்புறங்கள் மற்றும் பஜார் பகுதிகளில், துாய்மை பணி செய்யப்படாததால் ஆங்காங்கே குப்பை தேங்கி உள்ளது.இதனால், குப்பை தேங்கி உள்ள இடங்களில் துர்நாற்றம் வீசி, நோய்த்தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விரைந்து துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:-துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு டிராக்டர்களுக்கும் டீசல் போடாமல், இடைக்கழிநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன.இதனால், கடந்த 5 நாட்களாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ளப்படவில்லை.ஆகையால், துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கு டீசல் நிரப்பி, துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.