திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. சிவபெருமான் திருவடியில் வீற்றிருக்க விரும்பிய நான்கு வேதங்கள், மலைக்குன்றுகளாக உருவெடுத்து, ஒன்றின் உச்சியில் வேதகிரீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். திருக்கழுக்குன்றம் மட்டுமின்றி, சென்னை மற்றும் சுற்றுபுற பக்தர்களும், மாதந்தோறும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்கின்றனர்.ஆண்டிற்கு ஒரு முறை குறிப்பிட்ட நாள் நள்ளிரவில், சித்தர்கள் சூட்சும கிரிவலம் சென்று, வேதகிரீஸ்வரரை வழிபடுவதாகவும், அந்நாளில் பக்தர்களும் கிரிவலம் சென்று அருளாசி பெறலாம் என்றும், இப்பகுதி ஆன்மிக ஆர்வலர், சில ஆண்டுகளுக்கு முன், புதிய நடைமுறை உருவாக்கினார். இந்நிகழ்வு, நேற்று முன்தினம் நடந்தது. நள்ளிரவு 2:00 மணிக்கு, கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் திரண்டனர். அங்கு வேத மந்திர முழக்கங்களுடன் சிறப்பு பூஜை நடத்தி, கிரிவலம் புறப்பட்ட பக்தர்கள் காலை 3:00 மணி வரை, கிரிவலம் சென்றனர்.