உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மூளையில் ரத்த உறைவு சிகிச்சை பலனின்றி சிறுமி பலி

மூளையில் ரத்த உறைவு சிகிச்சை பலனின்றி சிறுமி பலி

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அருகே, மூளையில் ரத்த உறைவு ஏற்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசம்பு, 38. இவரது மனைவி லட்சுமி, 35. இவர்களது மகள் வினோதினி, 6. வசம்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், லட்சுமியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் வினோதினி, வேங்கடமங்கலத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கி, கண்டிகை பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆக., 23ம் தேதி, சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள தாய் வழி பாட்டி வீட்டிற்கு, உறவினர்கள் வினோதினியை அழைத்து வந்துள்ளனர். அன்று இரவு, சிறுமி அங்கு உறங்கிய போது, வாயில் இருந்து நுரை வந்துள்ளது. இதைப் பார்த்த உறவினர்கள், சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமியின் மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து, ஆக., 27ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிறுமி உயிரிழந்தார். இது குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி