உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் பஸ் நிலையத்தில் மக்கர் செய்த அரசு பேருந்து

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் மக்கர் செய்த அரசு பேருந்து

மதுராந்தகம் மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.மதுராந்தகத்திலிருந்து சித்தாமூர் வழியாக சூணாம்பேடு வரை, தடம் எண்: 'டி9' அரசு பேருந்து இயக்கப்படுகிறது.நேற்று, மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடிற்கு இந்த பேருந்தை இயக்க முற்பட்ட போது, பேருந்து 'ஸ்டார்ட்' ஆகவில்லை.பேருந்து பயணியர் மற்றும் நடத்துநர் இறங்கி, பேருந்தை தள்ளி இயக்கி, சூணாம்பேடு நோக்கிச் சென்றனர். நகர பகுதிகளுக்கு பராமரிப்பற்ற பழைய பேருந்துகளை இயக்குவதால், இதுபோன்று சிக்கல்கள் ஏற்படுகின்றன.தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்க உள்ளன. இதனால், இதுபோன்ற பேருந்துகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை