உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் டயர் வெடித்து விபத்து

கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் டயர் வெடித்து விபத்து

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், விழுப்புரத்தில் இருந்து, கிளம்பாக்கம் நோக்கி, அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.இதில் 40க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வரும் போது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓட்டுநர் சமயோசிதமாக பேருந்தை நிறுத்தி, அதில் பயணம் செய்த பயணியரை மாற்று பேருந்து வாயிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.மேலும், டயர் வெடித்ததில் அரசு பேருந்து சாலையில் நின்ற நிலையில், அதிகாலையில் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது. இதனால், பின்னால் வந்த வாகனங்கள், பழுதாகி நின்ற இந்த பேருந்தின் மீது மோதுவது போல் வந்து, பின் வலதுபுறமாக திரும்பிச் சென்றன.இதனால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் பணிமனையில் இருந்து ஊழியர்கள் வந்து, பழுதாகி நின்ற பேருந்தை பழுது நீக்கி, பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை