உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக 19 இடத்தில் திறக்க உத்தரவு

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக 19 இடத்தில் திறக்க உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக 19 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. பல இடங்களில், நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், 46 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் சினேகா, கடந்த ஆக., 28ம் தேதி உத்தரவிட்டார். திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக, கூடுதலாக 19 இடங்களில் தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, கலெக்டர் சினேகா நேற்று முன்தினம் உத்தரவிட்டு உள்ளார்.

கூடுதல் 19 கொள்முதல் நிலையங்கள்

மதுராந்தகம், லட்டூர், ஒரத்தி, வேடந்தாங்கல், நெல்லி, மேலகண்டை, மடையம்பாக்கம், சின்ன இரும்பேடு, பச்சம்பாக்கம், சூரை, குண்ணங்கொளத்துார், நாங்களத்துார், கோரப்பட்டு, ஆத்துார், அமிஞ்சிகரை, லத்துார், கிளியாநகர், பெரியவெளிக்காடு, வழுவதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ