மேலும் செய்திகள்
3.9 கிலோ குட்கா பறிமுதல்
23-Dec-2024
உத்திரமேரூர், உத்திரமேரூர், கடம்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா, 55. இவர், பேரப்பிள்ளைகளான சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த தீபக், 15, வினிசியா, 9, மற்றும் மருமகன் வினோத்குமார் ஆகியோருடன், அருகிலுள்ள வெங்கச்சேரி பாலாற்று தடுப்பணைக்கு, நேற்று முற்பகல் 11:00 மணிக்கு குளிக்க சென்றார்.அப்போது, வினிசியா, தீபக் ஆகிய இருவரும், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இதை கண்ட பத்மா, வினோத்குமார் கூச்சலிட்டவாறு நீரில் குதித்தனர். இதில், பத்மா நீரில் மூழ்கி பலியானார். தத்தளித்த வினோத்குமாரை அங்கிருந்தோர் மீட்டனர்.உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மாகரல் போலீசார், ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் பத்மா, தீபக் மற்றும் வினிசியா ஆகியோரின் உடலை மீட்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேஸ்திரி பலி
சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, எடமிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 50; கட்டட மேஸ்திரி. இவர், அப்பகுதியில் உள்ள பிள்ளையார் குளத்தில், நேற்று மதியம் 2:00 மணியளவில் குடிபோதையில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Dec-2024