மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்
மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான அரவையை நேற்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தனர்.ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், கரும்பு ஆலை இணை இயக்குநர் தமிழ்செல்வி, விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்த 2024-- 25ம் ஆண்டுக்கான அரவைப்பருவத்திற்கு 4,500 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.1 லட்சத்து 25 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், 1,700 கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர்.