மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி இளைஞர் பலி
19-May-2025
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் ஜி.எஸ்.டி., சாலை எஸ்.டி. உகம்சந்த் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தர்மசந்த் செளகாரின் மகன் எஸ்.டி. உகம்சந்த். இவர் காங்., கட்சியில் அகில இந்திய பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை தொடங்கியவுடன், அக்கட்சியில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, குடிநீர் வடிகால் வாரிய தலைவராகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், ஜெயலலிதா அணியில் இருந்தார். 1980, 1989 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இரு முறை மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ., வாக தேர்வாகினார். தொடர்ந்து தி.மு.க.,வில் இணைந்தவர் மாநில சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின், அவரது குடும்பத்தினர் மதுராந்தகம் ஜி.எஸ்.டி.,சாலையை, உகம்சந்த் பெயரில் மாற்றம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற முதலவர் ஸ்டாலின் மதுராந்தகம் ஜி.எஸ். டி., சாலையை எஸ்.டி. உகம்சந்த் சாலை என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.இதன் பெயர் பலகை துவக்க விழா நேற்று மதுராந்தகத்தில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், மதுராந்தகம் நகர் மன்ற தலைவர் மலர்விழி மற்றும் உகம்சந்த் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
19-May-2025