உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அணுசக்தி மைய சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் பகுதி மக்கள் அவதி

 அணுசக்தி மைய சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் பகுதி மக்கள் அவதி

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம், அணுசக்தி மைய சாலை பகுதியில், குப்பை குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியம் - அணுசக்தி மைய வளாகம் இடையே, 2 கி.மீ., சாலை உள்ளது. கல்பாக்கம் நகரிய குடியிருப்பு பகுதியில் இருந்து, அணுசக்தி மையத்திற்கு, அறிவியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தினமும் சென்று திரும்புகின்றனர். சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதியினர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சதுரங்கப்பட்டினம், மெய்யூர் ஆகிய பகுதிகளில், மக்கள், கடைக்காரர்கள், சாலையை ஒட்டி, பல ஆண்டுகளாக குப்பை குவித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம், குப்பையை மேடாக உயரவிட்டு, பல நாட்கள் கடந்தே அகற்றுகிறது. அங்கேயே எரித்தும் அழிக்கின்றனர். சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் என உள்ளதால். அவ்வழியே கடந்து செல்வோர், அவதிப்படுகின்றனர். சாலையில் புகை பரவி, விபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கவிழ்ந்து காயமடைகின்றனர். எனவே வட்டார வளர்ச்சி நிர்வாகம், அணுசக்தி துறையுடன் இணைந்து, சாலையை பராமரிக்க, இப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி